Wednesday, October 28
Shadow

Tag: பிறந்த தின

தயாரிப்பாளார் சித்தார்த் ராய் கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2, 1974 இல் மும்பையில் பிறந்தவர். சித்தார்த் ராய் கபூர் மும்பையில் ஆகத்து மாதம் 2, 1974 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை இவர் ஜி. டி. சோமனி நினைவுப் பள்ளியில் முடித்தார். சித்தென்கம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் வருட இதழின் தொகுப்பாளராக சித்தார்த் ராய் கபூர் இருந்துள்ளார். இவரின் தாய் சலோம் ராய் கபூர். இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் மேலும் இவர் முன்னால் இந்திய அழகி ஆவார். சித்தார்த்தின் சகோதரர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் குனல் ராய் கபூர். சித்தார்த் ராய் கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகை வித்யா பாலனை மணந்தார். சித்தார்த் ராய் கபூர் தனது தொழிலை பிரொக்டர் அன்ட...
நடிகை இஷாரா நாயர் பிறந்த தின பதிவு

நடிகை இஷாரா நாயர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இஷாரா நாயர் என்பவர் தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். 2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்: வெண்மேகம், பப்பாளி, சதுரங்க வேட்டை...

நடிகர் வீ. ரவிச்சந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வீ. ரவிச்சந்திரன்  என்று அறியப்பட்ட தனிப்பட்ட முறையில் ரவிச்சந்திரன் எனற இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை இயக்குனர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் கன்னடத் திரையுலகில் சிறந்த நிகழ்ச்சி நாயகன் என அழைக்கப்படும் இவர் தனது பன்முக பணிகளில் அவரது தொடர்பான படங்களில் பணியாற்றுபவர் ஆவார். குறிப்பிடத்தக்க திரைப்படத் தயாரிப்பாளர் என். வீராசுவாமியின், மகன் ரவிச்சந்திரன் கதேமா கல்லாரு என்ற படத்தில் ஒரு எதிர்மறை வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர், சக்கரவியூஹா (1983) என்றத் திரைப்படத்தில் தொடர்ந்து பங்களித். பிறகு பல நடிகர்களுடன்பல துணைக் கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, அவர் இயக்குனராக அறிமுகமான பிரேமலோகா (1987) என்ற படத்தில் நடித்தார், இது கன்னடத் திரையுலகில் மிக அதிகமாக வசூலித்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும். ஒரு தயாரிப்பாளராக, அவர் ஸ்ரீ ஈஸ்வரி புரொடக்சன்ஸ் என...
இயக்குனர் பிரபு சாலமன் பிறந்த தின பதிவு

இயக்குனர் பிரபு சாலமன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். காதல் கோட்டை திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் இயக்கிய திரைப்படங்கள்: இயக்குனர் கும்கி 2, தொடரி, கயல், கும்கி, மைனா, லீ, கிங் இவர் தயாரித்த படம்: ரூபாய்...

நடிகை சிம்ரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ள...

பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுஜாதா மோகன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 4000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார். சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963 ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார். 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இவர் பெற்ற பெற்ற விருதுகள் 2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும், 1996-ல் ‘...