மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)
நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்..
ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை.
கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
பிரபலமான ரவுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீ...
