Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

நாடோடிகள் 2 திரை விமர்சனம் ( உணர்வும் உணர்ச்சியும்)  Rank 4/5

நாடோடிகள் 2 திரை விமர்சனம் ( உணர்வும் உணர்ச்சியும்) Rank 4/5

Latest News, Review
சமூக சேவகர் ஜீவா (சசிகுமார்), தனக்கு திருமணம் நடந்த முதல் நாள் இரவில், தான் திருமணம் செய்ய உள்ள பெண், கட்டாயத்தின் பேரில் தன்னை திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து அந்த பெண்ணை அவளது காதலியிடம் சேர்க்க முயற்சிகிறார் சமூக சேவகர். ஆனால் பெண்ணின் குடும்பம், அவர்களை கவுரவ கொலை செய்ய முயற்சிகிறது. இதையறிந்த சமூக சேவகர் அந்த பெண்னையும், அவளது காதலனையும் காப்பற்றினாரா என்பதே படத்தின் கதை. ஒருவரியில் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம். சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி. தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை கூட வீட்டில் கொடுப்பத...
டகால்டி திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

டகால்டி திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

Latest News, Review
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகியிருக்கும் திரைப்படம் டகால்டி.. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். பெண்களை தேடி சீரழிக்கும் பணக்கார வில்லனிடம் சிக்கிய பெண்ணை காப்பற்றும் ஹீரோ, அந்த பெண்ணிடம் காதலில் விழுவது தான் படத்தின் கதை. மும்பையில் பல்வேறு மோசடி வேலைகளை செய்து பணம் சேர்த்து வருகிறார் குரு (சந்தானம்) அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) தனக்கு பிடித்த பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர். இவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் பாய் (ராதாரவி)யிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொல்ல ராதாரவி உத்தரவிட...

சைக்கோ திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே இளம் பெண்ணொருவர் மர்ம நபரால் கொல்லப்படுகிறார். இந்தக் கொலையை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது. இதையடுத்து உதவிக்கு ஃபோரன்சிக் டிபார்ட்மெண்டை சேர்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோவை போலீஸ் அழைக்கிறது. அவர் போலீஸ் அதிகாரியான விஷ்ணு பிரியாவுடன் சேர்ந்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே 'வி1 மர்டர் கேஸ்' படத்தின் கதை. மர்டர் மிஸ்டரி வகை படங்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட ஒரே கதைதான் என்றாலும் இதை கையாண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும் அயர்ச்சி ஏற்படாதவகையில் இருந்து ஓரளவு திரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக, இதுவரை தமிழ் படங்களில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத, காட்டப்படாத ஃபோரன் சிக் டிபார்ட்மெண்ட், ஒரு கொலையை கண்டுபிடிக்க எந்த அளவு உதவி புரிகிறது, ஒவ்வொரு கேஸிலும் அவர்களின் பங்கு எந்த அளவு இருக்கிறது என்பதை மையமாக எடுத்து, அதை சுவாரஸ...

பட்டாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
ஒரு பெரிய வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் அந்த நடிகரின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே கூடிவிடுவது தமிழ் திரையுலகில் வழக்கமானது. அதுவும் பல வகைகளிலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தில், மிக பக்குவமான பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து 'அசுர' வெற்றி பெற்ற பிறகு தனுஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இடையில் வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' முன்பே முடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் அறிந்திருந்தனர். இப்படி எதிர்பார்ப்புக்கு இடையில் வந்திருக்கும் 'பட்டாஸ்' மூலம் தனுஷ் அடுத்த கட்டத்துக்குப் போகிறாரா அல்லது 'மாரி' ஸ்டைல் பழைய ரூட்டுக்கே திரும்புகிறாரா? 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, ட்ரெயிலரை பார்த்தே கணிக்கக்கூடிய எளிய கதையோடு வந்திருக்கிறார். சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்...

தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)

Latest News, Review
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது. மூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர். தர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில்...

ஹீரோ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
சக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி (இவானா) ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார். இதையடுத்து ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை (அபய் தியோல்) எதிர்கொள்கிறார். இதற்கிடையே சத்யமூர்த்தி(அர்ஜுன்) பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அது படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் இல்ல படிக்கிறவனை வச்சு வியாபாரம் பண்றவன் என்று கூறும் மகாதேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சக்தி சத்யமூர்த்தியை எப்படி சந்திக்கிறார், சக்தி வாய்ந்த வில்லனான மகாதேவை எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ள...

தம்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
சினிமாவில் பல படைப்பாளர்கள் இருக்கிறார்கள். இதில் சிலரின் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியாக மலையாள சினிமாவின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தம்பி படம்  வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஹீரோ கார்த்தி கோவில் ஒரு திருடனாக சகல சகவாசங்களோடு வாழ்க்கையை ஜாலியாக கொண்டு போகிறார். ஒரு நாளை அவரை போலிஸ் துரத்த பின் வாழ்க்கையே மாறிப்போகிறது. ஊட்டியில் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என பிரபலங்கள் கூடி இருக்கிறார்கள். சத்யராஜின் மகன் சிறுவயதில் காணாமல் போக, 15 வருடங்கள் கழித்து கார்த்தியின் உருவில் மீண்டும் வீடு வந்து சேர ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் தம்பியை தொலைத்த சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் வந்துள்ள தம்பியை கொண்டாடமுடியாமல் திணறுகிறது அக்காவின் நெஞ்...

காளிதாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
தற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல். இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் இதன் பின்னணியை கொண்டு காளிதாஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. சரி படத்திற்குள் போகலாமா? நடிகர் பரத் இப்படத்தின் ஹீரோவாக ஒரு போலிஸ் அதிகாரியாக வருகிறார். காளிதாஸ் கேரக்டரான அவருக்கு மனைவியாக அன் ஷீ ட்டெல். இருவரும் இடையே முகம் சுளிப்பு. குறிப்பாக அவரின் மனைவி வித்யாவுக்கு. காரணம் கணவர் தன்னை கண்டுகொள்ளாமல் வேலை வேலை என பிசியாக இருக்கிறார் என்பதே. இதற்கிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள். இறந்த மூவருமே பெண்கள். ஒரே மாதிரியான சம்பவங்கள்.கொலையா தற்கொலையா என பல கேள்விகள். இதனால் பரத் மற்றும் போலிஸ் குழு மிகவும் தீவிரமாக இந்த சம்பவத்தில் விசா...

கேப்மாரி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
கேப்மாரி என்ற பெயரை கேட்டதும் பலருக்கும் என்ன இது?அப்படி என்ன இந்த படத்தில் என வித்தியாசமாக தோன்றும் தானே. அதுவும் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதே பார்வையுடன் கேப்மாரியை பார்ப்போம். படத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள். இருவரும்பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள். பின்ஜெய் அந்த பானத்தை அருந்தஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின்எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். உடனேதிருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்து காதலிக்க தொடங்குகிறார்கள். அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகை அதுல்யா. ஒருபக்கம்இவ...

மாமாங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
மாமாங்கம் சேரர் காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடந்த ஒரு திருவிழா. இந்த திருவிழாவை மையமாக வைத்து எழுத நினைத்த கதைக்கு மாமாங்கம் என்று பெயரிட்டு. பதினேழாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும் Period Drama இந்த படம். Period படத்திற்கே உண்டான லாஜிக் பார்க்காதே கேள்வி கேட்காதே என்பதுபோல். படம் வரலாற்று ரீதியாகத் துல்லியமாக எடுக்கப்பட்டது அல்ல சினிமாவிற்காக எடுக்கப்பட்டது என்ற பொறுப்புத்துறப்புடன் ஆரம்பமாகிறது படம். இனத்தால் பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க. சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை மரணத்திற்குத் துணிந்த தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.  இம்முறை நடக்கும் மாமாங்கத்தில் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள ‘சாவேரி’ இனத்திலிருந்து உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் ஆகிய இருவரும் செல்கிறார்கள்.  உன்னி முகுந்தனுக்கு வசனம் அதிகம் தரப்...