சை ரா நரசிம்ம ரெட்டி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
நடிகர்கள் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ’சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ராயலசீமாவின் சுதந்திரப் போராட்ட வீரரான ’யுயலவாடா நரசிம்ம ரெட்டியாக’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. ஆங்கிலேயருக்கு எதிரான நரசிம்மாவின் போரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போர் 1857-ல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களை கொண்ட இந்த படத்தின் கதை. பெரும்பாலான படம் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் விதிக்கப்படும் வரி...

