
ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. இந்த டீசருக்கு ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டீசர் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு மற்றொரு மகிழ்வான நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனது வீட்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இன்று ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்த...