Saturday, February 15
Shadow

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்று தனுஷ் அவரது டுவிட்டரில் கூறி இருந்தார். அதனால் நாளை வெளியாகும் ‘காலா’ டீசரில் இந்த வசனமும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா,இரஞ்சித் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம், வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.