சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!
சென்னை ஜீலை 13 : நடிகர் சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ’...
