பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த தினம்
சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட...

