ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிப்பார் அனிருத் ரஜினிகாந்த் நம்பிக்கை
'பேட்ட'
படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார்,
பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த்
ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம்,
ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர்
நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு
செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும்
வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று
9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக
நடைபெற்றது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
பேட்ட படத்துக்கு அனிருத் பிரமாதமா இசையமைச்சிருக்கார். அனிருத்தை
குழந்தைலேருந்தே பாத்துக்கிட்டிருக்கேன். இப்பவும் இளம் வயசுதான். ஆனா இந்தச்
சின்ன வயசுலயே இசைல மிகப்பெரிய ஜாம்பவானா இருக்கார் அனிருத்.
இதுக்கு அவங்க அப்பா ...

