Tuesday, April 23
Shadow

Tag: anniversary

நடிகை சண்முகசுந்தரி மறைந்த தின பதிவு

நடிகை சண்முகசுந்தரி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சண்முகசுந்தரி  ஒரு தமிழ் நடிகை. இவர் பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. தன்னுடைய ஐந்தாம் அகவையில் இருந்து, நாடகங்களில் நடித்து வந்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார். இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு நி...
நடிகை ஷோபா மறைந்த தின பதிவு

நடிகை ஷோபா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷோபா தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு...

நடிகை சௌந்தர்யா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சௌந்தர்யா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்:  படையப்பா, காதலா காதலா, அருணாச்சலம், பொன்னுமணி, தவசி...
நடிகர் எஸ். டி. சுந்தரம் மறைந்த தின பதிவு

நடிகர் எஸ். டி. சுந்தரம் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். டி. சுந்தரம் ஒரு இந்திய தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் ஆவார். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்டு திருவையாறு அரசு கலைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். சிறைவாசத்திலிருந்து விடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்தபோது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்...

நடிகை சுஜாதா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுஜாதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா, 1952 திசம்பர் 10 இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். சுஜாதா, 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். ...

இயக்குனர் சி. வி. இராசேந்திரன் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. வி. இராசேந்திரன் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார். இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அந்த காலத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, நாவல் எழுதியிருக்கிறார். சைதாப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்தவர். அந்த வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்து விட்டு ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அனுபவம் புதுமை என்கிற படம் தான் முதலில் இயக்கியது. அந்தப் படம் தோல்வி அடைந்ததால் மீண்டும் ஸ்ரீதரிடமே உதவி இயக்குனராக சேர்ந்தார். சிவாஜி, ஸ்ரீதர் படங்களில் நடித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஆனார். சிவாஜி சிபாரிசின் பேரில் கலாட்டா கல்யாணம் என்ற படத்தை இயக்கினார். அது பெரும் வெற்றி பெ...

நடிகை மீனாகுமாரி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
மீனாகுமாரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தன் வாழ்நாளில் ஏறத்தாழ 92 படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தந்தை நாடகக் கவிஞராகவும் உருது மொழிப் புலவராகவும் விளங்கினார். இந்தி திரையுலகில் “சோகங்களின் அரசி” (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பத்து ஐந்து ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும். வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து கொள்வதற்குமுன் இக்பால்பேகம் என்ற பெயரி ல் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறி னார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும் பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ...

நடிகை சி. கே. சரஸ்வதி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. கே. சரஸ்வதி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் படங்களில் வில்லியாக கொடுமைக்கார மாமியாராக, அத்தையாக நடித்தாலும் சிறந்த குணசித்திர, நகைச்சுவை நடிகையும் கூட என்றும் சிலப்படங்களில் நிரூபித்துள்ளார். ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவத...

நடிகை சுகுமாரி மறைந்த தின பதிவு

Top Highlights
சுகுமாரி தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார். நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். 1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாவிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். திருமணத்துக்குப் ...
நடிகர் சி. எல். ஆனந்தன் மறைந்த தின பதிவு

நடிகர் சி. எல். ஆனந்தன் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. எல். ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1960 ஆம் ஆண்டில் விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகளில் இவர் சிறந்து விளங்கினார். 1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார். கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள். பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இண...