சௌந்தர்யா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்:  படையப்பா, காதலா காதலா, அருணாச்சலம், பொன்னுமணி, தவசி

Related