Friday, April 17
Shadow

Tag: anu emmanuel

நடிகை அனு இம்மானுவேல் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனு இம்மானுவேல் ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார். உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது கலைத் துறையில் ஏதாவது ஒன்றைத் தொடர வேண்டும் என்று அனு அறிந்திருந்தார். உயர்நிலைப் பள்ளியில் அவரது முதல் வருடத்தில் துல்கர் சல்மானுடன் சார்லீ படத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்தார். ஆனால் இறுதி தேர்வுகள் காரணமாக அவர் திரும்பப் பெற வேண்டியிருந்தது. நிவின் பாலி...