Tag: #atharva #semapothaagathey #atharvafans #mishti #anaikasothi #msbhashkar #karunakaran#manobala #johnvijay #tailcinema tamilmovie #prince #nithik
இளைஞர்களை குறிவைக்கும் செம போதை ஆகாதே படக்குழு
பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல் செய்துவிட்டார்.
ஆனால் - இயக்குநருக்கு அடுத்தபட வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. அதுவும் தன்னுடைய முதல்பட ஹீரோவான அதர்வாவை வைத்தே அடுத்த படமும் இயக்குகிறார். அதுதான் ‘செம போத ஆகாதே’.
“படத்தோட தலைப்புலே மட்டுமல்ல. கதை, திரைக்கதையிலும் கிறங்கடிக்கிற சமாச்சாரங்கள் ஏகத்துக்கும் இருக்கு. ஆனா, யாரும் முகம் சுழிக்கிற மாதிரியான விஷயங்கள் எதுவும் இருக்காது” என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பித்த பத்ரி வேங்கடேஷ், முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று விளக்க ஆரம்பித்தார்.
“நானும், அதர்வாவும் இணைஞ்சிக் கொடுத்த ‘பாணா காத்தாடி’ ஓக்கேங்கிற அளவுக்கு ஓடிச்சு. அதுக்கு பிறகு திரும்பவும் அத...
அதரவா நடிக்கும் `செம போத ஆகாதே’ நவம்பர் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா நடிப்பில் தற்போது, `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே' படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`செம போத ஆகாதே' படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்திற்கான ரிலீஸ் குறித்த அறிவி...


