இணையதளங்களில் கசிந்த பாகுபலி 2 படத்தின் காட்சிகள்
இந்திய சினிமாவிலே அதிக பொருள் செலவு மட்டும் இன்றி கிட்டத்தட்ட் ஆயிரம் மேற்பட்ட கலைஞர்கள் பணிபுரிந்த பாகுபலி 2 படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.
பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2' ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ள...






