Thursday, April 25
Shadow

பாகுபலியில் என்னை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது – பிரபாஸ்

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது பாகுபலியின் இரண்டாம் பாகம் என்று தான் சொல்லணும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ப்ரோமோஷன் ஏற்கனவே ஹைதராபாத்யில் ஆரம்பித்து விட்டனர் இன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் இசைவேளியிட்டு விழா நடக்க இருக்கிறது இதில் பங்கேற்க வந்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா. இயக்குனர் ராஜா மௌலி இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு மொழி சார்ந்த படமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். படம் வெளிவந்த பிறகு இது இன்னொரு படத்தின் சாயல் மாதிரி இருக்கிறது என்று யாரும் சொல்லாதது பெரிய சந்தோசம்.

‘பாகுபலி’ படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்துதான் இரண்டு பாகமாக எடுத்தோம். இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், ‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ அல்லது வேறு வகையில்தான் சொல்ல முடிவு செய்துள்ளோம். இதை தவிர்த்து படமாக எடுக்கும் முடிவு இல்லை.

மீண்டும் இதேபோல் ஒரு பிரம்மாண்ட படம் பண்ணமுடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும். அதுபோல் மறுபடியும் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. எனவே, எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன்.

அதே போல் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது பிரபாஸ் இல்லாமல் வேறு யாரையாவது வைத்து எடுக்க முடியுமா என்று கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்கமால் வேறு யாரையும் வைத்து எடுக்கமுடியாது எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு வந்து இருக்குமா என்றால் அதுவும் சந்தேகம் பிரபாஸ் ஆல தான் இந்த படமே ஒரு சாத்தியம் என்றார் அதே கேள்வியை பிரபாஸ் யிடம் கேட்டதுக்கு அவரும் வேறு யாராலும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சற்றும் யோசிக்காமல் கூறினார்.

அதே போல நான் வளர்ந்த இந்த தமிழகத்தில் தமிழுலும் படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கு அதற்கான நேரம் கைகூடி வரும்போது நடக்கும் என்றும் கூறினார்.

பின்னர் பேசிய இயக்குனர் ராஜா மௌலி கூறுகையில் ‘பாகுபலி’ முதல் பாகத்தில் எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தியிருந்தேன். இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குண்டான கதையை சொல்லியிருக்கிறோம். முதல் பாகத்தில் உள்ள பிரம்மாண்டம், இரண்டாம் பாகத்திலும் இருக்கும்படி செய்திருக்கிறோம். முதல் பாகத்திற்கு கொடுத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

Leave a Reply