நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் – தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் – தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசிய ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகை நயன்தாராவை உட்பட சினிமா நடிகைகள் குறித்து பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாகவும், பெண்களை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசியல் மேடைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கட்சிகள் தங்களின் கொள்கை அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் பேசும் வார்த்தைகள் அடிப்படை கண்ணியத்தையும் பொறுப்பையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்” என குறிப்பிடப்பட்டுள்...
