தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை!
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை!
நட்சத்திரங்களைக் கொண்டாடும் திரையுலகில், கதைக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்!
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பெரும்பாலும் படம் வெளியான பிறகுதான் நடைபெறும். ஆனால், அந்த வழக்கத்தை மாற்றும் வகையில், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்புத் திரைக்கதையை (Official Shooting Screenplay), படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார், ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். இவரது இயக்கத...
