
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை!
நட்சத்திரங்களைக் கொண்டாடும் திரையுலகில், கதைக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்!
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பெரும்பாலும் படம் வெளியான பிறகுதான் நடைபெறும். ஆனால், அந்த வழக்கத்தை மாற்றும் வகையில், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்புத் திரைக்கதையை (Official Shooting Screenplay), படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார், ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். இவரது இயக்கத்தில் உருவாகும் ‘சென்சார்’ திரைப்படம், கதையைத் திரையில் காண்பதற்கு முன்பே புத்தகத்தின் வாயிலாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
பொதுவாக, ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பிறகுதான் அதன் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், ‘சென்சார்’ படக்குழு அந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டு, படத்தின் முழுமையான திரைக்கதையை முன்கூட்டியே வாசகர்களுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு திரைப்படம் திரையில் காட்சிகளாக உருவெடுப்பதற்கு முன்பே, அதன் கதையையும் எழுத்தின் வழியாக உருவாக்கப்பட்ட உலகத்தையும் வாசகர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த முயற்சி, ‘சென்சார்’ என்ற திரைப்படத்தின் தலைப்புக்கும் அதன் கருத்தியல் பின்னணிக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. அதேசமயம், தமிழ் சினிமாவில் திரைக்கதையின் முக்கியத்துவத்தையும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் எழுத்தாளர்களின் பங்களிப்பையும் முன்னிலைப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கூறுகையில், “தமிழ் சினிமாவில் பெரும்பாலும் திரையில் தோன்றும் நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே திரைக்கதைக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. ‘சென்சார்’ படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், கதையை அதன் அசல் வடிவத்திலேயே வாசகர்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, அது உருவான எழுத்துலகத்திற்குள் வாசகர்கள் பயணிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இது வெளிப்படைத்தன்மைக்கான முயற்சி மட்டுமல்ல; தமிழ் சினிமாவில் எழுத்துக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் முன்னெடுப்புமாகும்” என்றார்.
‘சென்சார்’ திரைப்படத்தின் புத்தக வெளியீடு மற்றும் படம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Tamil Cinema to Witness a First: Director Ramnath Palanikumar’s ‘Censor’ to Release Its Complete Screenplay as a Book Before the Film Is Made!
A unique initiative to put the spotlight on storytelling and screenwriting even before the film reaches the big screen.
In a distinctive move in Tamil cinema, the complete official shooting screenplay of the upcoming film Censor, directed by Ramnath Palanikumar, is set to be published as a book even before the film is made.
Conventionally, screenplays are published as books after a film’s theatrical release, particularly when the film receives significant audience appreciation or critical acclaim. Breaking away from this established practice, the team behind Censor aims to bring the film’s complete screenplay to readers in book form before it takes shape on screen.
Director Ramnath Palanikumar, known for directing films such as Ambasamuthiram Ambani, Thirunaal and Aadhhaar, also penned the screenplay and dialogues for Dindigul Sarathy. With Censor, he is taking a different approach by allowing readers to explore the story in its original written form before experiencing it as a film.
This initiative is expected to mark a significant milestone in Tamil cinema, offering the public an opportunity to read the complete screenplay of a feature film before its release. It also highlights the importance of screenwriting and the creative contribution of writers in shaping cinematic experiences.
Interestingly, the initiative is also conceptually connected to the film’s title, Censor. By making the screenplay available to readers in advance, the team seeks to bring greater attention to the written foundation of filmmaking and give the story an identity beyond its eventual visual presentation.
Speaking about the initiative, director Ramnath Palanikumar said, “In Tamil cinema, we usually celebrate the stars on screen before celebrating the screenplay. By publishing the screenplay of Censor as a book before the film’s release, we want readers to experience the story in its original form. Our intention is to let readers journey into the written world from which the film emerged, even before they watch it on screen. This is not just an effort towards transparency; it is also an initiative to give due recognition to writing and the creative contributions of screenwriters in Tamil cinema.”
Further details regarding the book publication and the film Censor will be announced soon.
