
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”
ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் தான் 'சென்னை டூ பாங்காக்'.இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின்,இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதைச்சுருக்கம் : இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.. அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.. அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை. இதை அனைத்த...