எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!
எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!
காதல், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தரும் ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
காதல் கதைகள் எத்தனை முறை சொல்லப்பட்டாலும், அவற்றை அணுகும் விதமும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த வகையில், காதலை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படம் வெறும் காதல் கதையாக மட்டுமல்லாமல், எதிர்பாராத நிகழ்வுகளால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் உருவாகும் மனப்போராட்டங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.
வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புரமோஷன் பாடல்கள் என வெளியீட்டுக்கு முன்பே ...
