Wednesday, October 28
Shadow

Tag: Haiku Tamil Film

ஹைக்கூ – திரை விமர்சனம்  (Rank 3.5/5)

ஹைக்கூ – திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
ஹைக்கூ – காதல் என்பது உரிமை கொண்டாடுவதல்ல; புரிந்துகொள்வது! காதல் தோல்வியை வாழ்க்கையின் முடிவாகப் பார்க்காமல், மனமாற்றத்திற்கான தொடக்கமாக அணுகியிருக்கும் ‘ஹைக்கூ’! காதல் கதைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. காதலிப்பது, பிரிவது, தவிப்பது எனப் பல்வேறு உணர்வுகளைத் திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால், காதலில் ஏற்படும் தோல்வி ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதையும், ஒரு உறவில் அன்புடன் சேர்ந்து நம்பிக்கையும் புரிதலும் எவ்வளவு முக்கியம் என்பதையும் பேச முயற்சித்திருக்கிறது ‘ஹைக்கூ’ திரைப்படம். இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், இளமைக்காலக் காதலில் தொடங்கி, பிரிவின் வலியைக் கடந்து, வாழ்க்கையைப் புதிதாகப் புரிந்துகொள்ளும் ஒரு இளைஞனின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. கோயம்புத்த...
எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!

எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!

Latest News, Top Highlights
எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை! காதல், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தரும் ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் கதைகள் எத்தனை முறை சொல்லப்பட்டாலும், அவற்றை அணுகும் விதமும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த வகையில், காதலை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படம் வெறும் காதல் கதையாக மட்டுமல்லாமல், எதிர்பாராத நிகழ்வுகளால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் உருவாகும் மனப்போராட்டங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புரமோஷன் பாடல்கள் என வெளியீட்டுக்கு முன்பே ...