
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!
லியோ சிவக்குமார் – பிரிகிடா சாகா நடிப்பில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் ‘டெலிவரி பாய்’!
நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை நானி எழுதி இயக்கியுள்ளார். Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
குடும்பப் பாசம், காதல், அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ள டிரைலர், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்துகிறது.
அம்மா – மகன் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளுடன் தொடங்கும் டிரைலர், பின்னர் குற்றச் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பாதையில் பயணிக்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் வாழ்க்கைக்கும் கதாநாயகனுக்கும் இடையே ஏற்படும் தொடர்பு, அவனது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை விறுவிறுப்பான காட்சிகளின் மூலம் உணர்த்துகிறது.
உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவையை இணைத்திருப்பது படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. காதல் காட்சிகளும் அதிரடி தருணங்களும் டிரைலரில் இடம்பெற்றுள்ளதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘டெலிவரி பாய்’ உருவாகியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இப்படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், கதாநாயகனின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சந்தி டாக்கீஸ் (Chaandi Talkies) சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவைக் கையாள, ஆர். வசந்தகுமார் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பி. ஜெய் முருகன் கலை இயக்கத்தையும், ஃபீனிக்ஸ் பிரபு சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
இயக்குநர் நானி அறிமுகமாகும் இப்படம், லியோ சிவக்குமாருக்கு மற்றொரு முக்கியமான திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசன் TR வெளியிட்ட டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ள நிலையில், ‘டெலிவரி பாய்’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரைலர் பார்க்க:
Silambarasan TR Unveils the Trailer of ‘Delivery Boy’ – Leo Sivakumar’s Upcoming Film Promises a Commercial Entertainer Blending Romance, Action and Comedy!
Starring Leo Sivakumar and Brigida Saga, ‘Delivery Boy’ is set to hit theatres on October 23.
Actor Silambarasan TR has unveiled the trailer of Delivery Boy, the upcoming film starring Leo Sivakumar, son of popular Tamil orator Dindigul Leoni, in the lead role. Written and directed by Nani, the film is produced by Amudha Leoni under the banner of Asasi Creations. The film is scheduled to release in theatres on October 23.
The trailer has attracted attention with its blend of family emotions, romance, action and comedy. Offering a glimpse into the life of an ordinary young man, it hints at a series of unexpected incidents that turn his world upside down.
Beginning with touching moments that highlight the bond between a mother and her son, the trailer gradually unfolds into a gripping narrative filled with crime, suspense and unexpected twists. It introduces a group of seven individuals who have grown up together since childhood and become involved in criminal activities. The trailer hints at how the protagonist gets caught up in their world and how these encounters affect his life, creating curiosity about the challenges he must overcome.
The combination of emotional family moments, romantic sequences, high-energy action and humour appears to be one of the film’s key attractions. With its mix of sentiment and commercial entertainment, Delivery Boy aims to appeal to a wide range of audiences.
Brigida Saga plays the female lead opposite Leo Sivakumar, while Radhika Sarathkumar essays the important role of his mother. The supporting cast includes Kaali Venkat, Bose Venkat, Jenson Dhivakar, Dushyanth and Udaya Deep, among others.
Produced by Lenin Matheswaran under the banner of Chaandi Talkies, the film features music composed by Sundaramurthy K.S. Ashokkumar Raj and Prasanna S. Kumar have handled the cinematography, while R. Vasanthakumar is in charge of editing. P. Jai Murugan serves as the art director, and Phoenix Prabhu has choreographed the action sequences.
Marking the directorial debut of Nani, Delivery Boy has generated interest with its engaging trailer and commercial elements. With Silambarasan TR unveiling the trailer, expectations surrounding the film have grown. Whether the film will emerge as a significant milestone in Leo Sivakumar’s career remains to be seen.
Delivery Boy is all set to arrive in theatres on October 23.
Watch the Trailer:
