கமல்ஹாசனின் அடுத்த திரைப்பயணம் தொடக்கம்; எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக கூட்டணி
கமல்ஹாசனின் அடுத்த திரைப்பயணம் தொடக்கம்; எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக கூட்டணி
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், தொடர்ந்து புதிய முயற்சிகளைத் தேர்ந்தெடுத்து வரும் கலைஞருமான கமல்ஹாசன், தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கைகோர்க்கிறார்.
கமல்ஹாசன் மற்றும் எஸ்.யு. அருண்குமார் இணையும் முதல் திரைப்படமாக உருவாகும் இந்தப் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மையில் நடைபெற்ற கமல்ஹாசனின் ‘லுக் டெஸ்ட்’ தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
புதிய தோற்றங்களிலும், இதுவரை செய்யாத கதாபாத்திரங்களிலும் தன்னை தொடர்ந்து மாற்றிக்கொண்டு வரும் கமல்ஹாசனின் இந்தப் புதிய லுக், திரைப்படம் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், படத்தின் கதை மற்று...
