விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் – விமர்சனம்
ஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்படுகிறது. இதில் அழகான தங்க சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி விற்க முயற்சிக்கிறார்.
அதன்படி, நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேன் மூலம் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷ்க்கும் வழியில் போலீஸ்க்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
போலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக் குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார்.
பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடவைவில் இவ...