தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் – நமீதா பிரமோத்!
தமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை. மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது. நீங்கள் ஒரு உதாரண பட்டியல் வாசித்தால் அது எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போகும். கலை திறன்கள் சங்கமித்து ஒரு பெருங்கடலை உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக தமிழ் சினிமா விளங்குவதாக நடிகை நமீதா பிரமோத் தன் ஆழ்மனதில் இருந்து உணர்கிறார். மேலும் அவர் இதை பற்றி குறிப்பிடும்போது, "கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்" என்றார்.
சமீபத்தில் நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று...