
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு `யு’ சான்றிதழை வழங்கியிருந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி ‘நிமிர்’ படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
