
வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு
நாடோடிகள் 2 படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் அப்படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது.
2003ஆம் ஆண்டிலேயே இயக்குநராக அறிமுகமானாலும் சமுத்திரக்கனிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுதந்தது 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் தான். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் நிறைவடைந்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த 26 அன்று இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...