90ஸ் காதலின் மறக்க முடியாத தருணங்கள்… மீண்டும் கண்முன்னே விரியும் ‘Notebook 90s – Kadhal Flashback’!
90ஸ் காதலின் மறக்க முடியாத தருணங்கள்... மீண்டும் கண்முன்னே விரியும் ‘Notebook 90s – Kadhal Flashback’!
ஒரு பார்வை... ஒரு சின்னப் புன்னகை... யாருக்கும் தெரியாமல் பரிமாறிக்கொள்ளும் காதல் கடிதம்... இப்படி சின்னச் சின்ன விஷயங்களிலேயே பெரிய சந்தோஷத்தைக் கண்ட காலம் 90-கள். அந்த அழகான பள்ளிப் பருவத்தையும், மனதில் இன்றும் பசுமையாக இருக்கும் முதல் காதல் நினைவுகளையும் மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறது Sony VIZHA-வின் புதிய தொடர் ‘Notebook 90s – Kadhal Flashback’.
இன்றைய தலைமுறைக்கு காதல் என்றால் பல்வேறு வழிகள் இருக்கலாம். ஆனால் 90-களில் ஒரு காதல் மலர்வதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும். பள்ளிக்கு வருவதன் பின்னணியில் ஒரு முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எதிர்பாராமல் சந்தித்துவிட்டால் அந்த நாள் முழுவதும் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இப்படியான எளிமையான, அழகான உணர்வுகள்தான் ...
