Tuesday, April 14
Shadow

Tag: #Padmavat

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பல எதிர்ப்புகளை தாண்டி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர், படத்தை பார்த்து அமேஷிங் விஷுவல், பெண்டாஸ்டிக் ஒர்க், பாடல்கள் சிறப்பாக உள்ளது என்று கூறி படக்குழுவினரை...
பத்மாவத் திரைப்படத்திற்கு வந்த மற்றொரு சோதனை!

பத்மாவத் திரைப்படத்திற்கு வந்த மற்றொரு சோதனை!

Latest News, Top Highlights
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே முக்கிய பாத்திரத்தில் நடித்த ‘பத்மாவத்’ திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது. ஒரு பக்கம் இந்த படம் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்று வசூல் குவித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் இந்த படத்துக்கு எதிர்ப்பு நிலவி வருவதால் அம்மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கிய படக்குழுவினருக்கும் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பத்மாவத்’ படத்தை பார்த்த மலேசியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேசியாவில் வெளியிடுவதாக இருந்தால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் மனது புண்படுவதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருப்பதாக நினைத்து இப்படத்துக்கு மலேசியாவில் தடை விதித்துள்ளது. இதனால் மலேசியாவில் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்...