Saturday, August 22
Shadow

Tag: Pari Elavazhagan Anbe Diana

காதல், குடும்பம், கலாச்சார மோதல்… ‘அன்பே டயானா’ – ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல்!

காதல், குடும்பம், கலாச்சார மோதல்… ‘அன்பே டயானா’ – ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல்!

Latest News, Top Highlights
காதல், குடும்பம், கலாச்சார மோதல்… ‘அன்பே டயானா’ – ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல்! சென்னை: காதல் என்பது இரண்டு மனங்கள் இணைவது மட்டுமல்ல; இரு வேறுபட்ட வாழ்க்கை முறைகளும், குடும்பப் பின்னணிகளும், கலாச்சாரங்களும் சந்திக்கும் இடமாகவும் இருக்கலாம். அப்படியொரு மாறுபட்ட காதல் கதையை நகைச்சுவையுடனும், குடும்ப உணர்வுகளுடனும் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘அன்பே டயானா’. திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இப்படம், வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. பெரம்பூரை மையமாகக் கொண்ட சென்னையின் இயல்பான வாழ்க்கைச் சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஒரு பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின் வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழைவதால் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. ஒருபுறம் குடும்பம், பாரம்பரியம...