திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் ‘வயலெட் கனவு’. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு அவரே கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார்.
எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்கும் இப்படத்தை, அப்பு மூவிஸ் சார்பில் திருமதி. ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் இப்படத்தை பி. நித்யானந்தன் B.A.D.F.T இயக்குகிறார்.
விவாந்த் – ரெய்னா ஜோடி
‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த், ‘வயலெட் கனவு’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அங்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரெய்னா, இப்படத்தில்...
