“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பாராட்டு
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார்.
அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது..
சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரி...