வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அதற்கு உதாரணம்.
ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தின. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர். அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல...
