காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம் (3.5/5)
ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நடிகர்கள் கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் வெளியாகியுள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார்.
ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் பிரிவில் முடிகின்றது. அதன் பின் நம்ம ஹீரோ அப்பாவின் நெருங்கிய நண்பர் மகள் அஞ்சலி நாயர் தனது குடும்பத்தோடு நம்ம ஹீரோ வீட்டிற்கு வராங்க. நம்ம ஹீரோவை பார்த்ததும் அஞ்சலி காதலில் விழுகின்றார். பின் அவரே நேரடியாக கவுசிக்கிடம் திரும...