விருமன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் சரண்யா பொன்வண்ணன். அம்மா சாவுக்கு அப்பா தான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுவதும், கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை கிளைமேக்ஸில் என்ன ஆனது என்பது தான் விருமன் படத்தின் கதை.
தாசில்தாரான முனியாண்டியின் 4வது மகன் தான் விருமன். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். நக்கல், நையாண்டி, வீரம், மிரட்டல் என கார்த்தி ஒவ்வொரு ஃபிரேமிலும்...