Wednesday, October 28
Shadow

Tag: #Review

பிளான் பண்ணி பண்ணனும் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்திற்கு பிறகு நடிகர் ரியோ நடிப்பில் வெளியாகியிருக்கும் 2வது திரைப்படம். நீண்ட இழுபறிக்குப் பிறகு பல சிக்கல்களை கடந்து ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படம் பிளான் பண்ணி பண்ணனும். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ரியோவும் பால சரவணனும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு ஒரு நடிகையை விருந்தினராக அழைக்கின்றனர். அந்த நடிகைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணமும், பால சரவணனின் தங்கை 'அராத்தி' பூர்ணிமா ரவியும் காணாமல் போகின்றனர். ரியோவும் பால சரவணனும் பூர்ணிமா ரவியை தேடி செல்கின்றனர். இதையடுத்து பூர்ணிமா ரவி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக வீட்டிலிருந்து நாயகி ரம்யா நம்பீசனின் உதவியோடு ஓடிவிட்ட உண்மையை இவர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரம்யா நம்பீசனை அழைத்துக்கொண்டு ரியோ, பாலசரவணன் இருவரும் ஆனந்தி திருமணத்தை...

ஆனந்தம் விளையாடும் வீடு திரை விமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு பெரிய குடும்பத்தில் இருக்கும் அலட்சியங்களையும், அவர்களைப் பிரித்து ஆட்சி செய்ய முயலும் ஒரு எதிரியையும் பற்றிப் பேசும் உங்கள் வழக்கமான குடும்ப ஆக்‌ஷன் நாடகம். பெரிய ஆம்பளை (ஜோ மல்லோரி) இரண்டு மனைவிகளை மணந்தார், அவர்களுக்கு காசி (சரவணன்), முத்துப்பாண்டி (சேரன்), பழனி (விக்னேஷ்), செல்வம் (சௌந்தரராஜன்), தர்மன் (சினேகன்) மற்றும் பலர் உட்பட பல மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். முத்துப்பாண்டியின் வணிக எதிரியான கருப்பன் (சேரன்) சகோதரர்களிடையே அலட்சியத்தை ஏற்படுத்தி அவர்களது குடும்பத்தை அடிக்கடி தொந்தரவு செய்கிறார். பெரிய ஆம்பளையின் இரு மனைவிகளின் மூத்த சகோதரர்களான முத்துப்பாண்டி மற்றும் காசி இருவரும் சேர்ந்து தங்கள் 'மெகா' குடும்பத்திற்கு ஒரு பெரி...

ரைட்டர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ரைடர் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காவல்துறை சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு காவல்துறையை அதிகாரம், அதிகாரத்திற்குள் இருக்கும் ஆண்டு பிரச்சனைகளை மையமாக வைத்து தமிழ் சினிமா மிக அற்புதமாக படங்களை தந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் ரைடர். இந்திய சினிமாவின் ஒரு நோட்வர்த்தி படமாகத்தான் ரைடர் படம் பார்க்கப்படுகிறது. ஜாதி, மத ரீதியான பிரச்சனை, அடித்தட்டு மக்களின் போராட்டம், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் பிரச்சனைகள், ஏக்கங்கள் போன்ற பல காட்சிகளை பா ரஞ்சித் தன்னுடைய படங்களில் காண்பித்திருக்கிறார். இருந்தாலும் கூட சமூகத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் பொறுப்புகளையும் ...

புஷ்பா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டும் தொழிலாளிதான் புஷ்பா என்ற புஷ்பராஜ். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த மரங்களை காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக துறைமுகம் வரை கடத்துவதில் தேர்ச்சிபெறுகிறார் புஷ்பா. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த கொண்டா ரெட்டி, மங்களம் சீனு போன்றவர்கள் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள். இதற்கிடையில், புஷ்பாவைப் பிடிக்க காவல்துறையும் முயற்சிகளை மேற்கொள்கிறது. சிலர் தோல்வியடைந்துவிட, அந்தப் பணிக்கு புதிதாகச் சேர்கிறார் பன்வீர் சிங் ஷெகாவத். செம்மரக் கடத்தல் தொழிலில் உருவாகும் எதிரிகளையும் புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் புஷ்பா எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் ஒரு பகுதி க...

முருங்கைக்காய் சிப்ஸ் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க இந்த படம் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்று சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் பாக்யராஜ். அவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கசடதபற. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்க...

3:33 திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
தன்அம்மா மற்றும் சகோதரியுடன் ஒரு புதிய வீட்டுக்குக் குடிவருகிறார் கதிர் (சாண்டி). குடியேறிய முதல் நாளிலிருந்தே அந்த வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசமான அதிர்வலை இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து சில கெட்ட கனவுகளும் அவருக்கு வருகின்றன. அதிகாலை 3:33 மணிக்குப் பிறந்ததால் அவருக்கு அந்த வீட்டில் சரியாக அதிகாலை 3:33 மணிக்கு இவை நடக்கின்றன. மறுநாள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் வேறு மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆனால், இவை எதுவும் சாண்டியைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இவையே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எதனால் நடக்கின்றன? அப்படியானால், அந்த பயமுறுத்தும் நிகழ்வுகள் கதிரின் கற்பனையா?இதிலிருந்து சாண்டியால் மீள முடிந்ததா என்பதே ‘3:33’ படத்தின் திரைக்கதை. படம் இது வரை நம்மை ஆட்கொள்ள வைக்கிறது. பின்னர், அந்த இடத்தில் ஏதோ ஒரு தீமை இருப்பதை அது தெளிவாகக் ...
ஆன்டி இண்டியன் (திரை விமர்சனம் 3.5/5)

ஆன்டி இண்டியன் (திரை விமர்சனம் 3.5/5)

Latest News, Review, Top Highlights
சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. சி.இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது. பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை. தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்த சினிமா. அப்போதே 'ஆன்டி இண்டியன்' பேசப்போகும் கதையின் நோக்கம் நமக்கு புரிகிறது. பட்டிணப்பாக்கத்தில் கடலோரத்தில் வசிக்கும் எளிய மனிதர்கள் சிலரை வைத்துக்கொண்டு இளமாறன் இந்தக் கதையை நமக்குச் சொல்கிறார். படத்தின் போக...
க் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

க் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், நடிகர் யோகேஷ், நடிகை அனிகா நடிப்பில் வெளியாகியுள்ள க் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார். கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தின் பிளஸ்: நடிகர்கள் யோகேஷ், அனிகா, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்ப...
ஜெயில் திரை விமர்சனம் (Rank 3.5/5)

ஜெயில் திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த உட்பட க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிவி பிரகாஷின் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம். சென்னையில் பூர்வ குடிமக்களை சென்னைக்கு வெளியே அரசு குடியமர்த்துகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் குறித்தும் பேசும் படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. குறித்தும் ஜிவி பிரகாஷ் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா விற்பனை செய்யும் இரு குழு...
மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியை 16ம் நூற்றாண்டில் ஆண்ட சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் திரைக்கதை எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. அந்தமான் சிறைச்சாலையை மையமாக வைத்து மோகன்லால் - பிரபு நடிக்க பிரியதர்ஷன் இயக்கிய(தமிழில் சிறைச்சாலை) 'காலாபாணி' பெரும் வரவேற்பைப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பின் அதே கூட்டணியில் 90 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. சாமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலி (மோகன்லால்), பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டை போர்ச்சுகீசியர்கள் ஆக்கிரமிக்க படையெடுக்கிற போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கடற்...