Saturday, June 6
Shadow

Tag: #Saamy2

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்த...
`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். த்ரிஷா விலகியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் ஒருமாதிரியாக கிடைத்திருக்கிறது. `சாமி ஸ்கொயர்' படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. வெளியான புகைப்படங்களில் `சாமி' படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், அவருக்கு சிலை வைக்கப்படுவதாகவும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாகவும் அந்த புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிகிற...