5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் டைகர் ஜிந்தா ஹே
சல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம்.
படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர். இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார்.
இதைப்பற்றி இயக்குனர் அலி அபாஸ் கூறும் பொழுது,
படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக, நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம். படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினை தேர்வு செய்தோம். ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம்...