‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக்
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக்
சூர்யா வருகையால் களைகட்டிய விழா – பகத் பாசில் நெகிழ்ச்சிப் பேச்சு**
சென்னை:
புதிய கதைக்களம், கற்பனை, சாகசம், உணர்வுகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், நடிகர் சூர்யாவின் வருகையும், நடிகர் பகத் பாசிலின் நெகிழ்ச்சியான பேச்சும் விழாவின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
படம் குறித்துப் பேசிய நடிகர் பகத் பாசில், ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ தன்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை சந்திக்காத வித்தியாசமான அனுபவத்தைத் தந்த திரைப்படம் என்று குறிப்பிட்டார்.
இப்படத்தின் கதையை முதன்முதலில் கேட்டப...
