நடிகை சுஜாதா மறைந்த தின பதிவு
சுஜாதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா, 1952 திசம்பர் 10 இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். சுஜாதா, 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்...
