நடிகை சுகன்யா பிறந்த தினம் இவரை பற்றிய சில தகவல்கள்
இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் புது நெல்லு புது நாத்து, வால்டர் வெற்றிவேல், ராஜராஜன் திரைப்படங்கள் உட்பட மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
புது நெல்லு புது நாத்து, எம். ஜி.ஆர் நகரில், சின்ன கவுண்டர், கோட்டை வாசல், திருமதி பழனிச்சாமி, தம்பி பொண்டாட்டி, செந்தமிழ் பாட்டு, ...
