சம்பாலா” வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதிரடி: சந்தீப் கிஷனுடன் புதிய பான்-இந்தியா ஃபேண்டஸி உலகம்!
“சம்பாலா” வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதிரடி: சந்தீப் கிஷனுடன் புதிய பான்-இந்தியா ஃபேண்டஸி உலகம்!
“சம்பாலா” படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த Shining Pictures நிறுவனம், அதே கூட்டணியுடன் இன்னொரு பெரிய முயற்சியில் இறங்கியுள்ளது. இயக்குநர் உகந்தர் முனியுடன் மீண்டும் இணைந்த தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு, இந்த முறை இன்னும் வித்தியாசமான, பரப்பளவு அதிகமான ஒரு கதை உலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த புதிய படத்தின் முக்கிய சிறப்பு – நடிகர் சந்தீப் கிஷன். இதுவரை பல வகை கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்த அவர், இந்த படத்தில் முற்றிலும் புதிய முகமாக, அதிக பவர் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு அவதாரத்தில் அவர் வரப்போகிறார் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பட அறிவிப்புடன் வெளியான கான்செப்ட் போஸ்டர் கூட இந்த ...
