சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு
சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு
அரசுடன் பேச்சுவார்த்தை தொடரும்; புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்
சென்னை: தமிழ் திரையுலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்டிருந்த சினிமா வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.
திரைப்படத் துறையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கடந்த 26-ம் தேதி சென்னையில் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து, திரைத்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
இந்த சந்த...

