Thursday, October 29
Shadow

Tag: Venkat Prabhu

“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

Latest News, Top Highlights
“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து! சென்னை: திரையுலகில் புதிய தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தொடங்கியுள்ள குறிஞ்சி அண்ணா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிவித்த நடிகர் சூரி, “குறிஞ்சி அண்ணாவுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறார் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த நிறுவனம் 100-க்கும...
‘திக். திக்.. திக்…’  ’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!

‘திக். திக்.. திக்…’ ’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!

Latest News, Top Highlights
‘திக். திக்.. திக்…’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது! திரையரங்குகளிலும் டீசர் திரையிடப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Dhik. Dhik.. Dhik…’ திரைப்படம், அதன் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து, இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடம் உருவான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் டீசரை வெளியிட்டு படக்குழுவுக்கு தங்களது ஆதரவைத் தெரி...
திரைக்கதை மன்னன் பாக்யராஜையே கவர்ந்த ‘பீப்’ கதை; செப்டம்பர் 18-ல் வெளியாகிறது புதிய கிரைம் டிராமா!

திரைக்கதை மன்னன் பாக்யராஜையே கவர்ந்த ‘பீப்’ கதை; செப்டம்பர் 18-ல் வெளியாகிறது புதிய கிரைம் டிராமா!

Latest News, Top Highlights
திரைக்கதை மன்னன் பாக்யராஜையே கவர்ந்த ‘பீப்’ கதை; செப்டம்பர் 18-ல் வெளியாகிறது புதிய கிரைம் டிராமா! குறும்பட உலகில் தனது திறமையை நிரூபித்த இயக்குநர் இல. சண்முக சுந்தர், தற்போது வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’. வழக்கமான வன்முறை கிரைம் த்ரில்லர் பாணியில் இருந்து விலகி, வித்தியாசமான கதை சொல்லும் முறையில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘கட்டு’ (Bind) என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பீப்’, வழக்கமான கி...
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா! சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது. திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் ...