Thursday, September 17
Shadow

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா!

சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது.

திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இயக்குநர்கள் பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர். நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜசேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திரைப்படத் துறையில் சக்திவேலனுடன் நீண்ட காலமாகப் பயணித்து வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததால், இந்த பிறந்தநாள் விழா நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.

Shakthi Film Factory Founder Shakthivelan’s Birthday Celebration Turns Into a Star-Studded Affair

Chennai witnessed a star-studded celebration as Shakthi Film Factory founder Shakthivelan marked his birthday in the presence of several prominent personalities from the Tamil film industry.

The birthday celebration brought together leading actors, directors, producers, distributors and theatre owners, who gathered to extend their warm wishes to Shakthivelan and celebrate the special occasion with him.

Among the celebrities who attended the event were actors Suriya, Karthi, Vikram Prabhu, Gautham Karthik, Parthiban, Sundar C, Madhampatty Rangaraj, Shanthanu, Gunaanidhi, Aegan and Sunil Reddy, among others.

Directors Pandiaraj, Adhik Ravichandran, Venkat Prabhu, Karthik Subbaraj, Ram, Uriyadi Vijay Kumar and Thiagarajan Kumararaja were also present and conveyed their birthday wishes to Shakthivelan.

Actresses Sakshi Agarwal and Athulya Ravi were among the other notable guests who graced the celebration.

The event also saw the presence of leading producers and industry personalities including A.M. Rathnam, Gnanavel Raja, Raja Sekar Pandian, Kannan Ravi, Amma Creations Siva, Arun Viswa, Arulnanthu and Arunkumar.

With several prominent names from across the Tamil film industry coming together under one roof to celebrate Shakthivelan, the birthday gathering turned into a memorable and vibrant evening filled with warm wishes and camaraderie.