Monday, April 20
Shadow

Tag: #vijay #fans #rumor

விஜய் திடீர் அறிக்கை சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி

விஜய் திடீர் அறிக்கை சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி

Latest News, Top Highlights
'சர்கார்' இசை வெளியீட்டில் விஜய் பேசியதிலிருந்து, அவரைப் பற்றிய அரசியல் விவாதங்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. இதில் பலரும் கலந்து கொண்டு விஜய் பற்றிய தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தார்கள். இதில் விஜய்யிடம் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்த பி.டி.செல்வகுமாரும் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துகளைக் கூறினார். 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பி.டி.செல்வகுமார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், பி.டி.செல்வகுமார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும் போது "விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்" என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாகப் பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களா...