தீபாவளி மகிழ்ச்சியை 200 பேருடன் பகிர்ந்த விஜய் சேதுபதி! தென்காசியில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்!!
தீபாவளி மகிழ்ச்சியை 200 பேருடன் பகிர்ந்த விஜய் சேதுபதி! தென்காசியில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்!!
தென்காசி: தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், அந்த மகிழ்ச்சி சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், நடிகர் விஜய் சேதுபதியின் முன்னெடுப்பில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் நெகிழ்ச்சியான சமூகநல நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில், கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
துளி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, அஜ...
