20 அடி விஸ்வாசம் கட் அவுட் சரிந்து அஜித் ரசிகருக்கு நடந்த விபரீதம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விஸ்வாசம் இந்த படம் இன்று உலகம் முழுவதம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த `விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, அவரது ரசிகர்கள் அனைத்து திரையரங்கு முன்பும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் `விஸ்வாசம் திரைப்படம்' இன்று காலை திரையிடப்பட்டது.
அப்போது, 200-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திரையரங்கம் முன்பு 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரே நேரத்தில் அஜித் கட்-அவுட் மீது 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறி மாலை அணிவித்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அப்போது, பாரம் தாங்காமல் அந்த கட்-அவுட் கீழ...
