குழந்தை ரசிகர்கள் கடவுள் கொடுத்த வரம் – டார்லிங் ஜிவி.பிரகாஷ்
தமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.
குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் நாளான 12ந்தேதி ஒரு மாதத்துக்கும் மேலாக எக்சாம் டென்ஷனில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களு...





