Thursday, April 18
Shadow

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”.

இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம்.

இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். “கும்பாரி” மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை.

கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் குருதேவ் இயக்கும் சாயம், ஹிந்தி வெப் சீரியல், சசிகுமார் சாருடன் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் அபிசரவணன், கொரோனா காலத்தில் மதுரையில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உதவியுள்ளார். அங்கு இருக்கும் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 1300 நபர்களுக்கும், மதுரையில் இருக்கும் எளிய 300 குடும்பங்களுக்கும் 1 வாரத்திற்கு தேவையான 13 வகையான காய்கறிகள் மற்றும் அரிசிகளை, திருநங்கைகள் 50 பேருக்கும், நெசவாளர்கள் 50 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி உதவியுள்ளார்.

நடிகர் அபி சரவணன், அட்டகத்தி, குட்டிப் புலி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி உள்பட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.